மோசமான கேப்டன்சி; மேட்சை ஆஸி.யிடம் தூக்கி கொடுக்கும் ரோஹித் - கதறும் ரசிகர்கள்!
ரோஹித் சர்மாவின் தொடர் சொதப்பல் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ரோஹித் சர்மா
மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கினார். 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
சமீபகாலமாகவே டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து மோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக அவர் அவுட்டாகிய விதம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி
அதாவது கம்மின்ஸ் வீசிய ஷாட் பிட்ச் பந்தை தேவையில்லாமல் புல் ஷாட் அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோகித். இவரது இந்த மோசமான ஃபார்ம் தொடரில் இந்த அணியின் பேட்டிங் வரிசையையே சீர்குலைத்துள்ளது.
India 🇮🇳 is playing BGT with 10 players. Rohit Sharma seems to be a Big Disaster in this Team 🤐
— Richard Kettleborough (@RichKettle07) December 27, 2024
Rohit Sharma scored just 22 Runs in 4 innings in BGT 2024-25. The worst performance by any Batter in this Series 😳 #INDvsAUS #RohitSharmapic.twitter.com/1aELT8aKoA
இந்திய அணிக்காக தற்போது ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி ஆடி வருகின்றனர். முன்னதாக, இந்திய அணிக்கு எதிராக பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்களை விளாசினார்.
தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் ரோகித் சர்மா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.