சீனியர்களை காப்பாற்ற பலிகடா ஆக்கப்பட்ட ரிஷப் பண்ட்? ரசிகர்கள் ஆதங்கம்!
மூத்த வீரர்களை காப்பாற்றும் வகையில் இளம் வீரர் ஒருவரை விலக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5வது டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி கடும் விமர்சனங்களை மேற்கொண்டது. இந்நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய வீரர்களை ஓய்வறையில் கடுமையாக சாடியதாக தகவல்கள் வெளியானது.
ரிஷப் பண்ட் நீக்கம்?
ஆனால், கம்பீர் மூத்த வீரர்கள் ஆன ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை. ரிஷப் பண்ட்டை குறி வைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதிலாக துருவ் ஜுரல் பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பிசிசிஐ மற்றும் கம்பீரை விளாசி வருகின்றனர்.