கேப்டனாகும் பும்ரா; ரோஹித் சர்மா நீக்கம் - புதிய இந்திய அணி அறிவிப்பு?
5வது டெஸ்டில் சில இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5வது டெஸ்ட்
மெல்போர்னில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த தொடர் முழுவதும் பேட்டிங் செய்ய சிரமப்பட்டு வந்த நிலையில், 4வது டெஸ்டிலும் மோசமாக விளையாடினார். இதனால் 5வது டெஸ்டில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டனாகும் பும்ரா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3 முதல் 7 வரை சிட்னியில் நடைபெறவுள்ளது. இதில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட வாய்ப்புள்ளது. அவருக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்கலாம்.
4வது டெஸ்டில் நீக்கப்பட்ட ஷுப்மான் கில் இடம் பெறலாம். விராட் கோலி தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வார்.
ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இடம் பெறலாம். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் இடம் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.