IND Vs AUS: ரூ.2 லட்சத்தை தொட்ட ரூம் வாடகை - வாய் பிளக்கும் ரசிகர்கள்!
ஹோட்டல்களின் ஆன்லைன் கட்டணம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
IND Vs AUS
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இதனால், அகமதாபாத்தில் ஹோட்டல் அறை கட்டணம் மற்றும் நகரத்திற்கான விமான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சிறந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரூ. 2 லட்சம் வரை உயர்ந்துள்ளன. மற்ற ஹோட்டல்களும் அவற்றின் கட்டணங்களை ஐந்து முதல் ஏழு மடங்கு வரை உயர்த்தியுள்ளன.
ரூ.2 லட்சம் வாடகை
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவில் மட்டுமின்றி, துபாய், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர். நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் கொள்ளளவு 1.20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. ஹோட்டல் அறைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், அவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது.
முன்பு பெயரளவிலான கட்டணத்தில் கிடைத்த அறைகள் ரூ.50,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை தொட்டுள்ளது. ஹோட்டல்களை முன்பதிவு செய்வதற்கு முன், மக்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள்.
சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு, சாதாரண நேரத்தில், 5,000 ரூபாய், ஆனால், தற்போது, 16,000 முதல், 25,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் அதிக விலையை செலுத்த தயாராக உள்ளனர்.