IND Vs AUS: இறுதிப்போட்டி.. 241 ரன்கள் இலக்கு - கோப்பை வெல்லுமா இந்திய அணி?
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.
IND Vs AUS
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவில் மட்டுமின்றி, துபாய், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர். நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் கொள்ளளவு 1.20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
இன்று IND Vs AUS இறுதி போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் இந்திய அணி விளையாடி வந்தது. அதில் 241 ரன்களை இலக்காக வைத்துள்ளது. தற்பொழுது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது, அதில் வார்னர் 3 பந்துக்கு 7 ரன்கள் எடுத்துள்ளார், இவரை முகமது ஷமி அவுட் செய்தார்.
இந்த நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி இதுவரை 23 விக்கெட் அடித்து முதலிடம் பெற்றுள்ளார். இதுவரை ஆஸ்திரேலியா அணியில் 3 விக்கெட்டை எடுத்துள்ளார். தற்பொழுது வரை 7 ஓவருக்கு 47 ரன்களை எடுத்துள்ளனர் ஆஸ்திரேலியா அணி. வெற்றி கணிப்பில் தற்பொழுது வரை ஆஸ்திரேலியா தான் முன்னிலையில் உள்ளது.