தொடக்கமே அதுதான்; அங்க விளையாடவே சங்கடமா இருக்கு - கவனம் பெறும் கோலி பேச்சு!
தனது பெயர் ஸ்டாண்ட் முன்பாக விளையாடுவதற்கு சங்கடமாக இருப்பதாக கோலி தெரிவித்துள்ளார்.
டெல்லி மைதானம்
டெல்லி மைதானத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. டெல்லி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே அதிகமாக வெற்றிபெற்றுள்ளதால்,
இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கியத்துவம் பெறும் என்று பார்க்கப்படுகிறது. மேலும், விராட் கோலி தனது சொந்த மண்ணில் களமிறங்குவதும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
கோலி பேச்சு
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் - விராட் கோலி ஆகியோரின் உரையாடல் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில், சிறுவயது முதல் டெல்லி மைதானத்தில் தான் வளர்ந்திருக்கிறேன். எனது சிறுவயது கிரிக்கெட் ஆட்டங்கள், ரஞ்சி டிராபி போட்டிகள், இந்திய அணிக்காக டெல்லி மைதானத்தில் ஆடியது என்று அத்தனை நினைவுகள் அப்படியே மனதில் பதிந்துள்ளது.
டெல்லி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள என் பெயர் கொண்ட ஸ்டாண்ட் முன்பாக விளையாடும் போது சிறிது சங்கடமாக இருக்கும். ஆனால் அதனை பற்றி பெரிதாக கூற விரும்பவில்லை.
ஆனால் என் சொந்த மண்ணில் உள்ள மைதானத்தில் என் பெயரில் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இப்படியொரு மரியாதை அளிக்கப்படும் என்று நினைத்து பார்த்ததே இல்லை எனப் பேசியுள்ளார்.