பயங்கரமாக சொதப்பிய விராட் கோலி..அடுத்த ஓவர் அக்சர் செய்த செயல்! நடந்தது என்ன?

Virat Kohli Indian Cricket Team Afghanistan Cricket Team T20 World Cup 2024
By Swetha Jun 21, 2024 06:37 AM GMT
Report

ஃபீல்டிங் செய்த போது விராட் கோலி ஒரு எளிய கேட்ச்சை நழுவவிட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.

சொதப்பிய கோலி..

நடப்பாண்டின் டி20 உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

பயங்கரமாக சொதப்பிய விராட் கோலி..அடுத்த ஓவர் அக்சர் செய்த செயல்! நடந்தது என்ன? | Ind Vs Afg Match Kholi Misses A Simple Catch

மறுபுறம் விராட் கோலி பொறுமையாக ரன் சேர்த்தார். ஒட்டுமொத்த ஆட்டத்தில் அவர் ஒரே ஒரு சிக்ஸ் மட்டும் அடித்து 24 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.

விராட் கோலி அதிக பந்துகளை சந்தித்தபோதும் நிதான ஆட்டம் ஆடியது பல விமர்சனங்கள் எழுந்தது. அடுத்ததாக சேஸிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணி தொடங்கியது. அப்போது மூன்றாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசினார்.

பும்ரா மட்டுமல்ல.. இந்திய அணியில் யார் பவுலிங் போட்டாலும் அடிப்பேன் - எச்சரித்த பிரபல வீரர்!

பும்ரா மட்டுமல்ல.. இந்திய அணியில் யார் பவுலிங் போட்டாலும் அடிப்பேன் - எச்சரித்த பிரபல வீரர்!

அக்சர் செய்த செயல்

அந்த ஓவரின் நான்காவது பந்தில் இப்ராஹிம் சத்ரான் பந்தை எட்ஜ் செய்து ஒரு எளிய கேட்ச் வாய்ப்பை கொடுத்தார்.

பயங்கரமாக சொதப்பிய விராட் கோலி..அடுத்த ஓவர் அக்சர் செய்த செயல்! நடந்தது என்ன? | Ind Vs Afg Match Kholi Misses A Simple Catch

அங்கு ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலியின் தலைக்கு மேலே பந்து சென்றது. விராட் கோலி இரண்டு கைகளாலும் பந்தை பிடிக்க முயன்றார். பந்து அவரது கைகளில் பட்டு நழுவி பின்னே சென்றது. விராட் கோலி சிறந்த பீல்டர் என்ற நிலையில் இது அவருக்கு எளிதான கேட்ச் வாய்ப்பு தான்.

இந்த வாய்ப்பை அவர் தவற விட்டதை யாராலும் நம்ப முடியவில்லை. அடுத்த ஓவரில் அக்சர் பட்டேல் இப்ராஹிம் சத்ரான் விக்கெட்டை வீழ்த்தினார். இதை அடுத்து விராட் கோலி கேட்ச் வாய்ப்பு தவறவிட்டதால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.பின்னர் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.