கருணை கொலைதான் முடிவு; குணப்படுத்த வாய்ப்பில்லை - நாயில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்!
நாயிலிருந்து, மோசமான நோய் மனிதர்களுக்கு பரவுவதாகக் கூறப்படுகிறது.
புருசெல்லா கேனிஸ்
பிரிட்டனில், புருசெல்லா கேனிஸ் என்ற நோய் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நாயில் இருந்து இந்த நோய் மனிதர்களுக்குப் பரவியுள்ளது. இதனை குணப்படுத்தவே முடியாது எனக் கூறுகின்றனர்.
தற்போது இதனால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இந்த பாதிப்பு பாதிக்கப்பட்ட நாய்களுக்கு மலட்டுத்தன்மை, நடப்பதில் சிக்கல் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
தீவிர பாதிப்பு
தொடர்ந்து, நாய்களிடம் இருந்து வெளிவரும் எச்சில், சிறுநீர் போன்ற திரவங்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதுகுறித்து, பிரிட்டிஷ் கால்நடை மருத்துவ சங்கம், நாய்களுக்கு இந்த நோய் ஏற்படும் போது அதைக் குணப்படுத்தவே முடியாது.
நாய் வாழ்நாள் முழுக்க இந்த நோயுடன் வாழ வேண்டும். அதன் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். இதனால் இந்த பாதிப்பு ஏற்படும் நாய்களை கருணைக்கொலை செய்யப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மனிதர்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்பிற்குச் சிகிச்சை இருக்கிறது. இருப்பினும், அது நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.