உயரும் பெண்களின் திருமண வயது; அதுவும் இந்தியாவில்.. முக்கிய ஆலோசனை!
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த ஆலோசனை நடைப்பெறவுள்ளது.
திருமண வயது
இந்தியாவில் ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு18 ஆகவும் உள்ளது. 2006 ஆம் ஆண்ட குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த சட்டத்தின் கீழ் இதுவரை ஏராளமான குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 2021ல் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் திருமண வயது 21 ஆக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
உயர்வு?
மேலும் இதுதொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது பரிசீலனை செய்யப்படாத நிலையில், மசோதா காலாவதியானது.
இந்நிலையில், மீண்டும் திருமண வயது நிர்ணயம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் வருகிற 22 ஆம் தேதி நடக்கிறது. அதில் புதிய மசோதா தாக்கல் செய்வது மற்றும் ஆண்-பெண் திருமண வயது நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து விவாதித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.