குழந்தையின்மை - எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

Pregnancy Relationship
By Sumathi Oct 03, 2022 02:31 PM GMT
Report

100 தம்பதிகளுக்கு 5 பேருக்கு இருந்த குழந்தைப்பேறின்மை இப்போது 20 ஆக அதிகரித்துள்ளது.

குழந்தையின்மை

காலதாமதமான திருமணம், உடல் எடை அதிகரிப்பு, நெருக்கடிமிக்க வாழ்க்கை, புகை, மது மற்றும் தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடுதல் போன்றவை குழந்தையின்மைக்கு முக்கியமான காரணங்களாக அமைகிறது.

குழந்தையின்மை - எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? | Increasing Infertility In Tamil Nadu

இதில், திருமணமான பெண்களும் ஆண்களும் எப்போது குழந்தைப்பேறின்மைக்கான மருத்துவரை அணுக வேண்டும் என்பதைப் பார்ப்போம்..

திருமணமான  பெண்கள்

குழந்தையின்மை - எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? | Increasing Infertility In Tamil Nadu

35 வயது அல்லது அதற்கு மேலிருந்து, 6 மாதங்களுக்கு மேலாக முயன்றும் கருவுறாதவர்,  40 வயதுக்கு மேல் குழந்தையின்றி இருப்பவர்கள்

மிகவும் வலியுடன் கூடிய மாதவிடாய் சுழற்சி காலத்தைக் கொண்டவர், முறையற்ற அல்லது அதிக இடைவெளிவிட்டு பீரியட் உள்ளவர்

பெலோப்பியன் குழாயில் அடைப்பு உள்ளவர் PCOS (Polycystic Ovarian Disease Syndrome) அதாவது சினைப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றுவது

பலமுறை அபார்ஷன் ஆனவர், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவராக இருந்தால்.

 திருமணமான  ஆண்கள்

குழந்தையின்மை - எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? | Increasing Infertility In Tamil Nadu

விந்தணு எண்ணிக்கை குறைவாகவும் அது தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்,  பாலியல் நோய் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்,  சிறுநீரக (விரை) வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்

குடும்பத்தில் குழந்தையின்மை பிரச்னை தொடர்ச்சியாக உள்ளவராக இருந்தால்…

இத்தகைய பிரச்னைகளைக் கொண்டவராக திருமணமான ஆண்களும் பெண்களும் இருந்தால், குழந்தைப்பேறு வேண்டுவோர் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுக வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நாடெங்கிலும் செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன.

பணத்தைக் கொடுத்து, உடலைக் கெடுத்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதை விட, திருமணமான தம்பதிகள், மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படவேண்டும்.