தங்கையே திருமணம் செய்த அண்ணன் - காரணம் கேட்டு கடுப்பான அரசு

uttarpradesh brothermarrieshisownsister
By Petchi Avudaiappan Dec 17, 2021 03:40 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

அரசின் சலுகையை பெற அண்ணன் தங்கையையே திருமணம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. 

அரசின் சலுகைககளை அரசை ஏமாற்றி பெற பலர் பல யுக்திகளை பயன்படுத்துவார்கள்  என்பதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். இப்படியாக அரசு தரும் சலுகைகளை பெற உத்தரப்பிரதேச  மாநிலத்தில் அண்ணணே தங்கையை திருமணம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

அங்கு ஏழை மக்கள் திருமணம் செய்ய உதவி தொகைகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசின் செலவில் ஒரே இடத்தில்பல திருமணங்கள் நடத்தப்பட்டு தம்பதிகளுக்கு ரூ35 ஆயிரம் பணம் மற்றும் திருமண சீர்வரிசைகள் கொடுக்கப்படும்.

அந்த வகையில் கடந்த 11 ஆம் தேதி ஃபெரோசாபாத்தில் ஒரே இடத்தில் 51 பேருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

இதில் ஒரு தம்பதி அண்ணன் தங்கை என்பது தெரியவந்ததுள்ளது. அவர்கள் அரசின் சலுகைகளை பெற திருமணம் செய்வது போல நடித்து அரசை ஏமாற்றியதும் அம்பலமாகியுள்ளது. இதையறிந்த போலீசார் இருவரும் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் ஆதார் கார்டுகளும் மீண்டும் சோதனை செய்யப்பட்டது.பின் திருமண சீர்வரிசையாக கொடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் திரும்ப வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.