சிங்கிள்ஸ் உஷார்..மேட்ரிமோனி செயலிகளில் அதிகரிக்கும் போலி கணக்குகள் - ஷாக் தகவல்!
டேட்டிங், மேட்ரிமோனி செயலிகளில் போலி கணக்குகள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலி கணக்கு
ஜூலியோ எனப்படும் ஆன்லைன் சிங்கிள்ஸ் கிளப், YouGov உடன் இணைந்து, இந்தியாவில் மேட்ச்மேக்கிங் ஆப் அனுபவங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை அன்மையில் வெளியிட்டது.
சமீப காலமாக இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில், 78% பெண்கள் போலியான Profile-களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர்.
ஷாக் தகவல்
82% பெண்கள் இதுபோன்ற செயலிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசின் அடையாள அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும் இதுபோன்ற செயலிகள் மூலம்
48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர். 74% பேர் தங்கள் சுயவிவரங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.