ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு - 1 கிலோ இவ்வளவா? பொதுமக்கள் ஷாக்!
ஆவினில் நெய், வெண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.
ஆவின் பொருட்கள்
தமிழகத்தில் ஆவின் பால் உட்பட பால் பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆவின் நெய் விலை ஒரே அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தான அறிவிப்பினை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விலை உயர்வு
அதன்படி,நெய் 15 மிலி - ரூ14-ல் இருந்து ரூ. 15ஆகவும்; நெய் 100 மிலி - ரூ.70-ல் இருந்து ரூ.80ஆகவும்; நெய் 100 மி.லி(ஜார்) - ரூ.75-ல் இருந்து ரூ.85ஆகவும்;
நெய் 200 மி.லி(ஜார்) - ரூ.145-ல் இருந்து ரூ.160ஆகவும்; நெய் 500 மி.லி(ஜார்) - ரூ.630-ல் இருந்து ரூ.700ஆகவும்; நெய் 1 லிட்டர் அட்டைப்பெட்டி(carton)- ரூ.620-ல் இருந்து ரூ.690ஆகவும் விற்பனை ஆகிறது.
அதேபோல், வெண்ணெய் சி ரகம் - 100 கிராம் - ரூ.55-ல் இருந்து ரூ.60ஆகவும்; வெண்ணெய் சி ரகம் - 500 கிராம் - ரூ.260ல் இருந்து ரூ.275ஆகவும்; வெண்ணெய் டி ரகம் - 100 கிராம் - ரூ.55ல் இருந்து ரூ.60ஆகவும்; வெண்ணெய் டி ரகம் - 500 கிராம் - ரூ.265ல் இருந்து ரூ.280ஆகவும் விற்பனையாகிறது.