பலாப்பழ ஐஸ்கிரீம் முதல் Cold Coffee வரை : ஆவினில் புதிதாக 10 பொருட்கள் அறிமுகம்

By Irumporai Aug 16, 2022 10:57 AM GMT
Report

ஆவினில்  விற்பனைக்கு வர உள்ள புதிய பொருட்களை வரும் 20ம் தேதி அமைச்சர் நாசர் தொடங்கி வைக்க உள்ளார்.

ஆவினில் புதிய பொருட்கள்

கோல்டு காப்பி, பலாப்பழம் ஐஸ்கிரீம், பாஸந்தி உள்ளிட்ட 10 புதிய பொருட்களை ஆவின் அறிமுகம் செய்ய உள்ளது. வருகிற 20-ஆம் தேதி, புதிய பொருள்களின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கிறார்.

பலாப்பழ ஐஸ்கிரீம் முதல் Cold Coffee வரை : ஆவினில் புதிதாக  10 பொருட்கள் அறிமுகம் | 10 New Products Cream In Avin

ஆவினில் அறிமுகமாகும் புதிய பொருட்கள்:

பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream), வெள்ளை சாக்லேட் (White Chocolate), குளிர்ந்த காஃபி (Cold Coffee), வெண்ணெய் கட்டி (Butter Chiplets), பாஸந்தி (Basundi), ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix), பாலாடைக்கட்டி (Processed Cheese), அடுமனை யோகர்ட் (Baked Yoghurt), ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit), ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku) ஆகிய 10 பொருட்கள் அறிமுகம் செய்ய உள்ளனர்.