ரூ.2 லட்சமாக அதிகரிக்கும் ஐபோன் விலை - நடுத்தர மக்களுக்கு இறங்கிய இடி
ஐ-போன் விலை 43 விழுக்காடு வரை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ-போன் விலை
இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரிகளை விதித்துள்ளார். அதில் இந்தியா மீது 26% வரி, சீனா மீது 34% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஐபோன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், ஆப்பிள் ஐபோன்களின் தயாரிப்புகளுக்கான முக்கிய உற்பத்தி மையமாக சீனா உள்ளது.
வரி உயர்வு
எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விலை 43 விழுக்காடு வரை உயரலாம். அதன்படி, 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஐ-போன் 16 பேஸ் மாடல் செல்போன் விலை இனி ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகலாம்.
அதேபோன்று ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஐ-போன் 16 Pro Max செல்போன் விலை ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலும் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. புதிய வரிகள் அமலில் இருப்பதால், அமெரிக்காவில் ஐபோன்களுக்கான விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.