இந்தியர்களுக்கு இனி விசா கிடையாது; சவுதி திடீர் தடை - என்ன காரணம்?

India Saudi Arabia Tourist Visa
By Sumathi Apr 07, 2025 12:30 PM GMT
Report

இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை 

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை சவூதி அரேபியா அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், ஹஜ் புனித யாத்திரை ஜூன் நடுப்பகுதி வரை இருக்கும்.

saudi arabia visa

அதுவரை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதனால், ஹஜ் யாத்திரை முடிவடையும்வரை 14 நாடுகளுக்கு உம்ரா விசா, வணிக விசா, குடும்ப விசா போன்றவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான விசாவைப் பெற்று சவூதி வரும் பிற நாட்டு மக்கள் ஹஜ் கிரியை முடியும் வரை இங்கேயே சட்டவிரோதமாக தங்கிவிடுகிறார்கள்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதி - பதைபதைக்க வைக்கும் தகவல்

பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதி - பதைபதைக்க வைக்கும் தகவல்

விசாவுக்கு தடை

எனவே, இந்த தடையின் மூலம், முறையான பதிவு இல்லாமல் ஹஜ் செய்ய முயற்சிப்பவர்களை தடுக்க முடியும். ஏப்ரல் 13 வரை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கும் உம்ரா பயணம் உள்ளிட்ட சில வகையான விசா வழங்கப்படும்.

இந்தியர்களுக்கு இனி விசா கிடையாது; சவுதி திடீர் தடை - என்ன காரணம்? | Saudi Arabia Suspends Visas For 14 Countries

அதன்பிறகு, ஹஜ் தவிர்த்து அனைத்து வகை விசாக்களும் நிறுத்தப்படும். என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல், வெப்பம் உள்ளிட்டக் காரணங்களால் உயிரிழந்தனர். அதில், பலர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கியிருந்தவர்கள் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.