பட்டம், பி.எட் முடித்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தகவல்!

Tamil nadu Government of Tamil Nadu
By Jiyath Nov 16, 2023 06:01 AM GMT
Report

ஆசிரியர் மற்றும் வட்டாரவள மைய பயிற்றுனர் பணியிடங்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 582 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணிகளில், 2 ஆயிரத்து 222 காலியிடங்கள் உள்ளன.

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி இதற்கான நேரடி நியமன போட்டித்தேர்வு நடைபெறுகிறது. எனவே, வரும் 30ம் தேதிக்குள் பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

எண்ணிக்கை அதிகரிப்பு

இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் காலியாக இருந்த 360 பட்டதாரி மற்றும் வட்டார வள மைய பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

பட்டம், பி.எட் முடித்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தகவல்! | Increase In Number Of Graduate Teacher Posts

அதற்காக ஆசிரியர் மற்றும் வட்டாரவள மைய பயிற்றுனர் பணியிடங்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை https://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.