திடீர் என பின் வாங்கிய பள்ளிக்கல்வித்துறை...!அதிர்ந்து போன மாணவர்கள் - மே-8ல் +2 பொதுத்தேர்வு முடிவுகள்
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை, நீட் தேர்வுக்கு பின்பு வெளியிடுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
மே 5-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படலாம், இதனால், நீட் தேர்வுக்கு பின்பு வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பதால் தேர்வு முடிவை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
இந்த நிலையில், மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுகள் 7-ஆம் தேதி நடைப்பெற உள்ள நிலையில், மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in ; http://dge1.tn.nic.in ; http://dge2.tn.nic.in ; http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.