நாட்டில் அதிகரிக்கும் சிறுபான்மையினரின் மக்கள் தொகை - குறையும் இந்துக்களின் எண்ணிக்கை

Government Of India India
By Karthick May 10, 2024 07:00 AM GMT
Report

1950'ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

increase in muslim people rate in india hindu less

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் மூலமாக "சிறுபான்மையினர் மக்கள் தொகை -- நாடுகள் இடையேயான நிலை" என்ற தலைப்பின் கீழ் விரிவான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு சிறுபான்மையினருக்கு நாட்டில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறுகிறதா? என்பதற்காக நடத்தப்பட்டது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

increase in muslim people rate in india hindu less

அந்த ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்தியாவில், கடந்த 1950 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான காலக்காலத்தில், இந்தியாவின் பெரும்பான்மையினர் என குறிப்பிடப்படும் இந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா - அறிவித்தது எந்த நாடு தெரியுமா?

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா - அறிவித்தது எந்த நாடு தெரியுமா?

ஒட்டுமொத்த பெரும்பான்மையினரின் மக்கள் தொகை சதவீதம் 78.06 ஆகும். ஆனால் அதே நேரத்தில், சிறுபான்மையினர்களாக குறிப்பிடப்படும் முஸ்லிம்கள் மக்கள் தொகை 43.15 சதவீதம் அதிகரித்து, 14.09 சதவீதமாக உள்ளது என்றும் கிறிஸ்துவர்களின் மக்கள்தொகை 5.4 சதவீதம் உயர்ந்து, 2.36 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

increase in muslim people rate in india hindu less

சீக்கியரின் மக்கள் தொகை 1.85 சதவீதமும், புத்த மதத்தினரின் எண்ணிக்கை 0.81 சதவீதமும் ஜைனர்களின் எண்ணிக்கை 0.36 சதவீதமும் பார்சி மக்களின் தொகை 0.004 சதவீதம் குறைந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.