இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா - அறிவித்தது எந்த நாடு தெரியுமா?
இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை
ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றறொரு நாட்டிற்குள் செல்ல விசா என்பது அவசியமான ஒன்று. சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம்.
ஆனால், கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன. இந்நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துது.
இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனத்தால் கையாளப்படும் விசாக்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது, இந்தியா சீனா, ரஷியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என இலங்கை அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
சுற்றுலா விசா
இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச விசா சேவையை தொடர அரசு உறுதி பூண்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.