சார்பதிவாளர் அலுவலகத்தில் சிக்கிய ரூ.3000 கோடி - ஐ.டி அதிரடி ரெய்டு!

Tamil nadu Income Tax Department
By Vinothini Jul 06, 2023 04:45 AM GMT
Report

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாகவும், விதிகளுக்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்ப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலக வருவாய் தொடர்பான கணக்குகளை கண்காணிக்கத் தொடங்கினர்.

income-tax-raid-in-registrar-office

தொடர்ந்து, சென்னை அருகே உள்ள செங்குன்றம் , திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சுமார் 17 மணிநேரம் வரை சோதனை நடந்தது.

முறைகேடு

இந்நிலையில்,சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 கோடிக்கி மேல் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரி நுண்ணறிவு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

income-tax-raid-in-registrar-office

தொடர்ந்து, முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக ரூ.3000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாததை கண்டுள்ளனர். மேலும், திடீரென நடந்த சோதனையால் பரபரப்பு சூழல் நிலவியது.