IT ரெய்டு.. திமுக பெண் பிரமுகர் வீட்டில் சோதனை - அதிகாரிகள் அதிரடி!

Tamil nadu Coimbatore DMK
By Vinothini Nov 06, 2023 05:02 AM GMT
Report

பெண் நிர்வாகி ஒருவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறை

தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு, இவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக இருப்பவர் மீனா ஜெயக்குமார்.

income-tax-raid-in-coimbatore-dmk-member-house

இவர் தனது குடும்பத்தினருடன் கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 3-ம் தேதி இவரது வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்று இவரது வீடு மற்றும் இவரது மகன் வீடுகளில் சோதனை நடத்தினர்.

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

சோதனை

இந்நிலையில், இன்று 4-வது நாளாக மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவரது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

income-tax-raid-in-coimbatore-dmk-member-house

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நீடித்து வருகிறது.