வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.
ஐடி ரெய்டு
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, கட்டுப்பாட்டு அறையை அமைத்து பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், நெல்லை, 44 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 முன்னணி அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும், அவர்கள் தொடர்புடைய தொழில் ரீதியிலான அலுவலகங்கள், அரசின் குடிநீர் வழங்கல் வாரியம், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.
பணப்பட்டுவாடா
பணப்பட்டுவாடா நடப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சோதனை நடத்துவதற்கு வசதியாக வருமான வரித்துறையினர் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். முன்னதாக, திருநெல்வேலியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.