சென்னையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு - தொழிலதிபர்களுக்கு செக்!
Chennai
By Sumathi
2 years ago
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐடி ரெய்டு
சென்னையில், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் தொடர்புடைய நிறுவனங்கள்,
ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், செங்கல்பட்டு படூர் பகுதி உட்பட 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.