அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றது.
அமைச்சர் வீட்டில் சோதனை
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கரூரில் உள்ள அவரது வீடு, சென்னையில் அவர் தங்கியுள்ள அரசு பங்களா உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
பரபரப்பில் தமிழகம்
மேலும், கோவையில் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களிலும் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவ வருகிறது.
ஆளும் கட்சி அமைச்சர் ஒருவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேலே குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.