வருமான வரி இன்னும் தாக்கல் செய்யவில்லையா? இதோ முக்கிய அறிவிப்பு!
வருமான வரி தாக்கல் செய்ய 1 நாள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்குகடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியது.
எனவே, இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் அவகாசம்
வருமான வரி சட்டப்பிரிவு 234 எப்-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.
அதே சமயம், ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டியிருந்தால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை திருத்தப்பட்ட மற்றும்
தாமதமான வருமான வரி கணக்கை வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த காலக்கெடு அனைவருக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்க.து