ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம்; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு - முழு விவரம்!

Smt Nirmala Sitharaman India GST
By Sumathi Sep 04, 2025 12:19 PM GMT
Report

ஜிஎஸ்டி விகித சீரமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சீரமைப்பு

புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என

nirmala sitaraman

இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் அறிமுகமாகும் டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ்? பரவும் தகவல்!

மீண்டும் அறிமுகமாகும் டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ்? பரவும் தகவல்!

நிர்மலா அறிவிப்பு

மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த,புதிய ஜிஎஸ்டி வரி முறை செப் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.