வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை, அதுவும் ஒரே நேரத்தில்.. எகிறும் பரபரப்பு!
தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐடி ரெய்டு
சென்னையில் ஆழ்வார்பேட்டை, கொளத்தூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்களில்
இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, கொளத்தூர் சிவ பார்வதி நகரில் அமைந்துள்ள முத்து என்பவர் வீட்டிலும்,
பரபரப்பு
பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள பிரியா என்பவர் வீட்டிலும், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் கணேஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனைக்கான காரணம் குறித்தும், என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்படுகின்றன என்பது குறித்தும் அடுத்தடுத்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.