பிரபல தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு - பரபரப்பு!
தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை திடீரென சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறனர். இந்த சூழலில் இன்று காலை முதல் திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தனின் வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொழிலதிபர் ரத்தினம், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார், இவருக்கு தமிழகம் முழுவதும் மணல் அள்ளுதல், சில்லறை விற்பனை செய்தல், மணல் குவாரி, ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டி விற்கும் தொழில்களை செய்து வருகிறார்.
அமலாக்கத்துறை ரெய்டு
இந்நிலையில், திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வீட்டை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.