எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை - செந்தில் பாலாஜி விளக்கம்
தனது வீட்டில் சோதனை நடக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும்
அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
வருமான வரித்துறை சோதனை
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மற்றும் கரூர் எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை. தனது தம்பி மற்றும் உறவினர்கள் வீட்டில் தான் சோதனை நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.