முக்கிய தொழிலதிபர்கள் வீட்டில் திடீர் ரெய்டு; எங்கெல்லாம், யாருக்கு குறி?
10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை
இன்று சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனுக்கு சொந்தமான கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும்,
சென்னை நுக்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தி. நகர், கோபாலபுரம், கே.கே நகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது.
திடீர் ரெய்டு
பெங்களூரிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அதிகாரிகளின் உதவியுடன் இந்தச் சோதனையை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.