கோடிக்கணக்கில் வருமானம்? : யுடியூபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
கணக்கு காட்டாமல் அதிகம் சம்பாதிப்பதாக கூறி கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
வருமானவரித்துறை ரெய்டு
வருமானத்தை சரிவர கணக்கில் குறிப்பிடாமல் இருப்பதாக கூறி கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
வரி செலுத்தாத யுடியூபர்கள்
கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நடிகை பியல் மானி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட யுடியூபர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.
இவர்களில் பலர் வருடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு சிலர் தங்களுக்கு வரும் வருமானத்தை வருமான வரி கணக்கில் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த ரெய்டு நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.