நீரிழிவு நோயால் அவதியா? இந்த 5 வேர் காய்கறிகளை டயட்டில் அவசியம் சேர்த்துக்கோங்க!
நீரிழிவு நோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய வேர் காய்கறிகள் பற்றி பார்க்கலாம்.
நீரிழிவு நோய்
சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மரபணு போன்றவற்றால் நீரிழிவு நோய் ஏற்படலாம். இது பெரும்பாலும் பாலின சார்புடையது அல்ல என்று கூறப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் இதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வதால் பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
எனினும் நம் உண்ணும் முறைக்கு சர்க்கரை நோய்க்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கான டயட்டில் சேர்த்து கொள்ள கூடியவையாக ரூட் வெஜிடபிள்ஸ் என்றழைக்கப்படும் வேர் காய்கறிகள் இருக்கின்றன.
இந்த வகை காய்கறிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டிருக்கின்றன.
இவை குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்களை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான பல வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் உள்ளது.
கோசுக்கிழங்கு
நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் எடுத்து கொள்ள வேண்டிய சத்தான உணவுகளில் முக்கியமான வேர் காய்கறி டர்னிப் (Turnip) ஆகும். இதற்கு தமிழில் கோசுக்கிழங்கு என்று குறிப்பிடப்படுகிறது. அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளது.
இந்த காய்கறியை சாப்பிட்டால் ஒருவருக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை பெற்று முழுமையாக உணர உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இது சரியான ஒரு உணவாகும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு
சிறந்த வேர் காய்கறிகளில் ஒன்றான சர்க்கரைவள்ளி கிழங்குகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் அதிகமாக உதவுகிறது. அதே சமயம் சிறந்த, திருப்திகரமான சுவையையும் இது வழங்குகிறது.
இந்த கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, மாங்கனீஸ், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன என்பதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
முள்ளங்கி
முள்ளங்கிகளை டயட்டில் சேர்த்து கொள்வதால் மிகவும் எளிமையாக ரத்த சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த முடியும். முள்ளங்கியானது குறைந்த கலோரியை கொண்டுள்ள வேர் காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது.
எடை மற்றும் ரத்தக் கொழுப்பின் அளவை குறைக்கவும் முள்ளங்கி உதவுகிறது. முள்ளங்கியின் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரிக்க செய்வதோடு, ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
கேரட்
சமைக்காமல் சாப்பிடாலும் சிறந்த ருசியை தரக்கூடிய கேரட்டுகள், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.
கேரட் மாவுச்சத்து இல்லாத (nonstarchy) காய்கறி என்பதால், நீரிழிவு நோயாளிகள் அவற்றை தாராளமாக சாப்பிடலாம் என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவித்துள்ளது.
பீட்ரூட்
நீரிழிவு நோயின் விளைவுகளை குறைக்க உதவும் ஊட்டச்சத்து பண்புகள் பீட்ரூட்களில் ஏராளமாக நிறைந்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்த பீட்ரூட் பெரும் பங்காற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.