இந்த 6 அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா நீரிழிவு இருக்கலாம்!
Diabetes
By Sumathi
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
நீரிழிவு நோய்
சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மரபணு போன்றவற்றால் நீரிழிவு நோய் ஏற்படலாம். இது பெரும்பாலும் பாலின சார்புடையது அல்ல என்று கூறப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் இதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வதால் பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
- பார்வையில் ஏற்கனவே குறைபாடு இருப்பவர்களுக்கு நீரிழிவு மேலும் மங்கலான பார்வைகுறைபாட்டை உண்டாக்கும்.
- சரியாக ஓய்வெடுத்து ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் ஒருசிலருக்கு சோர்வு ஏற்படும், அது நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
- அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுவதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிதான்.
- எந்தவொரு உணவு முறை, உடற்பயிற்சி அல்லது டையூரிடிக் சிகிச்சை இல்லாமல் எடை இழப்பு ஏற்படுகிறதோ, அது பொதுவாக நீரிழிவு நோயின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
- கழுத்து, அக்குள், இடுப்பு போன்றவற்றில் அடர் கருப்பு நிறத்தில் மாறும்.
- சருமத்தில் சாதாரணமாக உண்டாகக்கூடிய சிராய்ப்புகள் முதல் வெட்டு காயங்கள் வரை மெதுவாக ஆறும்.