சாலையில் நடந்து சென்ற நபர்.. லிப்ட் கொடுப்பதுபோல நடித்து நரபலி கொடுத்த கொடூரம் - பகீர் பின்னணி!
புதையல் கிடைக்க வேண்டும் என்றால் ஆசையில் ஒருவரை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி மர்மான முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்தவர்,பரசுராம்புராவை சேர்ந்தவர் பிரபாகர் ( 52 வயது)என்பது தெரியவந்தது.
இவர் அந்த பகுதியில் செருப்பு தைக்கும் வேலை செய்து வந்துள்ளார். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஆந்திராவின் குண்டுர்பி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் ரெட்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் அவர் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்ததில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்போது ஆனந்த் ரெட்டி, பாவகடாவில் உள்ள உணவகத்தில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
நரபலி
பண நெருக்கடியிலிருந்த ஆனந்த் ரெட்டிக்கு ஜோதிடர் ராமகிருஷ்ணன் அறிமுகமாகி உள்ளார்.அப்போது ஒரு ஆணை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று ராமகிருஷ்ணா என்கிற ஜோதிடர் ஆனந்த ரெட்டியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி சாலையில் சென்றுகொண்டிருந்த பிரபாகருக்கு இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்து தனியாக அழைத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொடூரச் செயலை செய்த ஆனந்த் ரெட்டி மற்றும் ஜோதிடரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.