எங்க வீட்ல விசேஷம்..ஆசையாக அழைத்த காதலன் - கடைசியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!
நண்பர்களுடன் சேர்ந்து பொறியியல் மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பரிதலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் உசேன் (வயது 25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.இந்தநிலையில், சம்பவத்தன்று ஷேக் உசேன் தன்னுடைய வீட்டில் சுப நிகழ்ச்சி நடப்பதாகவும், இதில் இளம்பெண்ணைக் கலந்துகொள்ள வேண்டுமென அழைத்துள்ளார்.
இதனை உண்மை என நம்பிய இளம்பெண் ஷேக் உசேன் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது அவரது வீட்டில் எந்தவித சுப நிகழ்ச்சியும் நடக்காததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவரது வீட்டில் ஷேக் உசேன் நண்பர்கள் இருந்துள்ளனர்.
நேர்ந்த கதி
அதன்பிறகு வீட்டிலிருந்து வெளியேற முயன்ற போது ஒரு அறைக்குள் தள்ளிஷேக் உசேன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.பின்னர் அவர்களிடம் தப்பி வந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஷேக் உசேன், சிந்தலா பிரபு தாஸ் மற்றும் ஷேக் கலி சைதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.