3 ஆண்டு காதல்.. தற்கொலை ஒப்பந்தம் போட்ட இளம் ஜோடி - கடைசியில் காதலன் ட்விஸ்ட்!
காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் இளம் ஜோடி தற்கொலை ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் ஜோடி
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் யாதவ் -மீரா இளம் ஜோடி மேற்படிப்பு முடித்துவிட்டு, கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.இந்த விவகாரம் , இரு வீட்டார் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து மீராவின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு ஆணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், நம்பிக்கையற்ற நிலைக்குக் காதல் ஜோடி தள்ளப்பட்டனர். இந்த நிலையில், சச்சின் யாதவ் -மீராவும் ஒப்பந்தம் ஒன்று போட்டுள்ளனர்.
அதில் மீராவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, சச்சினும் தற்கொலை செய்வது என முடிவாகி இருந்தது. அதன்படி, சச்சின் யாதவ் வீட்டிற்கு மீரா வந்துள்ளார். அப்போது தனது கையிலிருந்த துப்பாக்கியைக் கொண்டு மீராவைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
தற்கொலை ஒப்பந்தம்
துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் மீரா சடலமாகக் கிடந்தார் அருகில் கையில் துப்பாக்கியுடன் ,சச்சின் யாதவ் நின்றுகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் .
அதன்பிறகு, சச்சின் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பிச் சென்ற சச்சினைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.