பறந்து வந்த பலூன்களால் மூடப்பட்ட விமான நிலையம் - பலூனில் என்ன இருந்தது தெரியுமா?
வடகொரியாவில் இருந்து வந்த பலூன்களால் தென்கொரிய சியோல் விமான நிலையத்தை மூடியுள்ளது.
வடகொரியா
வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. தென்கொரியாவை சீண்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை செய்து வருகிறது. ஏற்கனவே தென் கொரியா எல்லைக்குள் ஏராளமான பலூன்களை வட கொரியா அனுப்பியது.
இந்த பலூன்களை ஆய்வு செய்ய இராணுவ வெடிமருந்துப் பிரிவு, இரசாயன மற்றும் உயிரியல் ஆய்வு பிரிவு ஆகியவற்றை களமிறங்கியது தென்கொரியா. இதில் கிழிந்த ஆடைகள், பேட்டரிகள், குப்பைகள், மனித கழிவுகள் ஆகியவை இருந்தன. இது போன்ற இழிவான செயல்களை நிறுத்த வேண்டுமென தென்கொரியா எச்சரித்தது. ஆனாலும் வட கொரியா அதை தொடர்ந்து வருகிறது.
இன்சியான் விமான நிலையம்
இந்நிலையில் நேற்று மீண்டும் தென்கொரிய எல்லைக்குள் பலூன்களை அனுப்பியுள்ளது வடகொரியா. இதில் ஒரு பலூன் தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் அருகே விமானங்கள் நிறுத்தப்படும் பகுதியில் விழுந்தது. மேலும் பல பலூன்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே பறந்துகொண்டிருந்தால் விமானம் நிலையம் தர்காலிகமாக 3 மணி நேரம் மூடப்பட்டது.
இதனால் அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கிருந்து கிளம்ப வேண்டிய விமானங்களும் தாமதாகவே கிளம்பின. நள்ளிரவு 1.46 முதல் 4.44 வரை விமான சேவை பாதிக்கப்பட்டதாகவும், அதன் பின் விமானங்கள் வழக்கம் போல் இயங்கியதாகவும் இன்சியான் சர்வதேச விமான நிலைய கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களில் 100 க்கு மேற்பட்ட பலூன்கள் தென்கொரிய எல்லைக்குள் வந்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பலூன்கள் பெரும்பாலும் தலைநகர் சியோலை நோக்கி வருவதாகவும், அந்த பலூன்களில் காகித குப்பைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.