விசா அலுவலகத்தில் ஓடிய ஆபாசப்படம்; முகம் சுளித்த பெண்கள், குழந்தைகள் - அதிர்ச்சி!
பாகிஸ்தானில் உள்ள விசா அலுவலகம் ஒன்றில் ஆபாசப்படம் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசா அலுவலகம்
பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் உள்ள விசா அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள் தங்களது பயண நடைமுறைகள் மற்றும் பிற விவரங்களை சரிசெய்ய வந்துள்ளனர்.
அப்போது, அந்த அலுவலகத்தில் உள்ள விளம்பரப்படுத்தும் டிவியில் திடீரென இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுப்பது மற்றும் ஆபாச உடையில் கட்டிப்பிடிப்பது போன்ற வீடியோ ஓடத்தொடங்கியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் முகம் சுளிக்கவைக்கும் அளவிற்கு ஓடியுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
இதனால் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் டீவியை அணைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அஹ்மர் கான் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பாட்னா ரயில் நிலையத்தில் நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க செய்தது.