இன்றுவரை இந்தியாவால், பாகிஸ்தானை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியவில்லை - பாகிஸ்தான் நடிகை பகீர்!

Cricket Pakistan India
By Jiyath Oct 23, 2023 09:00 AM GMT
Report

இன்றுவரை இந்தியாவால் பாகிஸ்தானை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியவில்லை என்று பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவர் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றுவரை இந்தியாவால், பாகிஸ்தானை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியவில்லை - பாகிஸ்தான் நடிகை பகீர்! | Pakistan Actress Sehar Shinwari Abaout Ind Pak War

முன்னதாக, பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய போட்டிகளிலேயே இந்தியாவிற்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி மற்றும் பாகிஸ்தான் வீரருக்கு எதிராக இந்திய ரசிகர்கள் 'ஜெயஸ்ரீ ராம்' என கோஷமிட்டது போன்ற நிகழ்வுகள் பாகிஸ்தான் ரசிகர்களை பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில் அடிக்கடி இந்தியாவிற்கு எதிராகவும், இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த சேஹர் ஷின்வாரி என்ற நடிகை அடுத்து நடக்கும் போட்டியில் வங்கதேச அணி, இந்திய அணிய வென்றால் வங்கதேச வீரர் ஒருவருடன் டேட்டிங் செல்வதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்தியா இஸ்லாமிய குடியரசாக மாறினால் இந்திய கிரிக்கெட் டீமுக்கு சப்போர்ட் - பாகிஸ்தான் நடிகை பகீர்!

இந்தியா இஸ்லாமிய குடியரசாக மாறினால் இந்திய கிரிக்கெட் டீமுக்கு சப்போர்ட் - பாகிஸ்தான் நடிகை பகீர்!

நடிகை சர்ச்சை பதிவு

ஆனால் அந்த போட்டியில் வங்கதேச அணியை, இந்தியா துவம்சம் செய்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அந்த நடிகையை கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

இன்றுவரை இந்தியாவால், பாகிஸ்தானை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியவில்லை - பாகிஸ்தான் நடிகை பகீர்! | Pakistan Actress Sehar Shinwari Abaout Ind Pak War

அதில் "இன்றுவரை, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை ஒருமுறை கூட பாகிஸ்தானால் தோற்கடிக்க முடியவில்லை, இன்றுவரை இந்தியாவால் பாகிஸ்தானை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியவில்லை.. கணக்குகள் சமம்" என்று சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும்  இந்தியா, பாகிஸ்தானை போரில் வென்றது குறித்து கமெண்டுகளை பதிவிட்டு அந்த நடிகையை கடுமையாக சாடி,வருகின்றனர்.