இளைஞரை வெட்டி சாய்த்த நண்பன்..காவலர் கண்முன்நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி!
காவலர் கண்முன் இளைஞர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன் - செல்வி. இந்த தம்பதிகளுக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன். தேவேந்திரனும் - மணிகண்டனும் நண்பர்களாகப் பழகி வந்துள்ள நிலையில் நெல் அறுவை இயந்திரம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று தேவேந்திரனுக்கும் - மணிகண்டனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் சமாதானம் பேச, தலைமைக் காவலர் ஸ்ரீதர் என்பவர், இருவரையும் வயல்காட்டு பகுதிக்கு அழைத்துள்ளார். பேச்சுவார்த்தை நடந்தபோது, தேவேந்திரனுக்கும் மணிகண்டனும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் காவல் துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
வெட்டிக்கொலை
அப்போது திடீரென காவல் அதிகாரியின் முன்னிலையிலேயே தேவேந்திரன் மணிகண்டனை வெட்டிக்கொலைசெய்தார் .இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மணிகண்டனின் உடலுடன் சென்று காவல் நிலையம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காவல் நிலையத்தின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கினர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தேவேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.