இளம்பெண்ணுடன் ஒரே அறையில் 6 இளைஞர்கள் - விசாரணையில் பகீர் தகவல்!
ஓட்டலில் ஒரு பெண்ணுடன் 6 இளைஞர்கள் தங்கியிருந்துள்ளனர்.
கால்செண்டர் மோசடி
மத்திய பிரதேசம், மாதவ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஒரு பெண்ணுடன் 6 இளைஞர்கள் தங்கியிருந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவர்களை விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
7 பேரும் போலியான கால்சென்டரை ஓட்டல் அறையில் அமைத்து அதன் மூலமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டவரை பல நாட்களாக ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர். பிரபல மென்பொருள் நிறுவனமான பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பணியாளர்கள் எனக் கூறியுள்ளனர்.
7 பேர் கைது
ஆங்கிலம் பேசியும், லேப்டாப், ஹெட்ஃபோன்களை மாட்டிக் கொண்டும் வெளிநாட்டவரை ஏமாற்றிக் கொண்டிருந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடம் இருந்து சேவைக்கான கட்டணத்தை ஏமாற்றி பெற்று வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு 8 லேப்டாப், 15 செல்போன்கள் மற்றும் பல கேட்ஜெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அபய் ரஜாவத், நித்தேஷ் குமார், தீபக் தாபா, பர்வேஸ் ஆலம், ஸ்வேதா பார்தி, ராஜ் கைலாஸ்கர், சுரேஷ் வாசல் என்பது தெரியவந்துள்ளது.