ஹோட்டலில் புகுந்து ஜோடி மீது தாக்குதல்; 6 பேரால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - பகீர் சம்பவம்!
6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த ஜோடியை தாக்கி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.
தாக்குதல்
கர்நாடகா மாநிலம் ஹனகல் பகுதியில் உள்ள ஹோட்டலில் 40 வயதுள்ள ஆண் ஒருவரும், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 26 வயதுள்ள பெண் ஒருவரும் அறையெடுத்து தங்கியுள்ளனர்.
இதனை கவனித்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், தனக்கு தெரிந்த நபர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த இருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் புகுந்து, இருவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், அந்த பெண்ணையும் உடன் இருந்த நபரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆளில்லா இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அந்த பெண்ணிடம், 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
பின்னர் அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து சொந்த ஊருக்கு சென்றுவிடுமாறு அனுப்பியுள்ளனர். ஹோட்டல் அறைக்குள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வீடியோவாகவும் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் மேலும், 3 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேர் மீதும் கூட்டு பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.