தேர்வுக்கு சென்ற மாணவிகள்..அடுத்தடுத்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் - பகீர் பின்னணி!
10-ம் வகுப்பு மாணவிகள் அடுத்தடுத்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள்
ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள சித்ரகொண்டா பகுதியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்வின் போது இந்த பள்ளியில் படித்துவரும் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதே போல் கடந்த 3 நாட்களுக்கு முன் சித்ரகொண்டா நகரில் அரசால் நடத்தப்படும் உறைவிட பள்ளி ஒன்றில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுகளை எழுதியுள்ளார்.
பின்னணி?
அப்போது கடும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை பிறந்தது.ஆனால் கடந்த பல மாதங்களாகக் கர்ப்பமாக இருந்த சிறுமிகளைப் பள்ளி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நல அதிகாரி ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையாக அந்த அரசுப் பள்ளியின் பெண் ஊழியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.