மாணவர்களுக்குடன் ஏற்பட்ட மோதல்.. கழிவறையில் சடலமாக கிடந்த மாணவன் - வெறிச்செயல்!
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்குடன் ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் - வனிதா தம்பதியினர். இவர்களது மகன் கவின்ராஜ். 14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற கவின்ராஜ் இடைவேளையின் போது கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் கதறி அழுந்தப் பெற்றோர் சிறுவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அடித்து கொலை
அதில் , மாணவன் கவின்ராஜிற்கும், வேறொரு மாணவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த சுழலில் நேற்று காலை பள்ளியின் கழிவறையில் மீண்டும் கவின்ராஜிற்கும் அந்த மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த மாணவன் சரமாரியாகத் தாக்கியதில் கவின்ராஜ் இறந்தது தெரியவந்தது.இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்த மாணவனைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.