பாக். தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதம்; இம்ரான்கான் கட்சி முன்னிலை - கம்பேக்?
இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவுகள்
பாகிஸ்தான், பலுசிஸ்தானில் கடந்த 7ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து நிலவிய பரபரப்பில் நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
தற்போது, இணைய சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டுள்ளது. தகவல்களின்படி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இம்ரான் கான் முன்னிலை
இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் இக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சிகள் தலா 47 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
முத்தாஹிதா குவாமி இயக்கம் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. அங்கு மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில், ஊழல் வழக்கில் சிறை, சின்னம் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இம்ரான் கான் சிறையில் இருக்கும் நிலையில், அவரது கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னணியில் இருப்பது பெரும் விவாதங்களாஇ கிளப்பியுள்ளது.