ஜெயிலில் தூக்கம் வராமல் கழுத்தில் குத்திய இம்ரான் கான்; பரவும் ஷாக் வீடியோ - உண்மையா?
இம்ரான் கான் தூக்கமின்றி மனஅழுத்தத்தில் கழுத்தில் குத்தும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
இம்ரான் கான்
கடந்த 5ம் தேதி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த வாட்ச், பேனா உள்பட பல்வேறு பரிசு பொருட்களை
கருவூலத்தில் ஒப்படைக்காமல் ஊழல் செய்த வழக்கில் இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வீடியோ உண்மையா?
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்ரான் கான் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறார். கண்களை மூடியபடியே இருக்கிறார். மேலும் திடீரென்று தனது கழுத்து பகுதியில் கைகவிரல்களால் குத்தும் காட்சிகள் குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது.
தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்த நிலையில், அந்த வீடியோ சிறையில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. மேலும் இம்ரான் கானின் பழைய வீடியோவை எடிட் செய்து அதனை சிறையில் இருப்பது போல் சிலர் பரப்பி வரும் தகவல் வெளியாகி உள்ளது.
பரவும் வீடியோ நீதிமன்ற வளாகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.