இம்ரான் கான் இனி தேர்தலில் 5 ஆண்டுகள் போட்டியிட முடியாது - 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
3 ஆண்டுகள் சிறை தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இம்ரான் கான் இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி ரூ.14 கோடி ஊழல் செய்ததாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட முடியாது?
ரூ.1 லட்சத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.