இம்ரான் கான் விவகாரம் - ஆதரவு தெரிவித்த முன்னாள் மனைவி!
இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டதற்கு முன்னாள் மனைவி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இம்ரான்கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்தார்.

அப்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வைத்து அவரை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர். பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.
ஆதரவு
கைதுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்தது. இதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இம்ரான் கான் கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என்றும் அவரது ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர்.
Finally sense has prevailed ???? pic.twitter.com/8K5IV1BgKt
— Jemima Goldsmith (@Jemima_Khan) May 11, 2023
இந்நிலையில் இம்ரான்கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தும், அவருக்கு ஆதரவாகவும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.