இம்ரான் கான் கைது சட்ட விரோதம்; விடுதலை செய்யுங்கள் - கொந்தளித்த நீதிமன்றம்
இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது எனப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் கைது
ஊழல் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, ரேஞ்சர்ஸ் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் நீதிமன்ற ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து அதிரடியாக கைது செய்தனர்.

இதனால் இம்ரானின் ஆதரவாளர்கள், அந்நாட்டின் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பல இடங்களில் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவி வருகிறது.
சட்ட விரோதம்
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.

அப்போது, "இம்ரான் கானை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்திலிருந்து ஒரு தனிநபரை எப்படி கைது செய்ய முடியும்? நீதிமன்ற பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்றத்திலிருந்து எவரையும் கைது செய்ய முடியாது. ஒரு நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தால், அவர்களைக் கைது செய்வதன் அர்த்தம் என்ன?
ஒருவருக்கு நீதிக்கான உரிமையை எப்படி மறுக்க முடியும்? 90 ராணுவ வீரர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தால், நீதிமன்றத்திற்கென என்ன மரியாதை இருக்கிறது? எனவே, இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது. அதனால் கைது நடவடிக்கை செல்லாது.
அதன் முழு செயல்முறையும் பின்வாங்கப்பட வேண்டும். இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுவிசாரணை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை இம்ரான் கான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு அரசியல்வாதியின் பொறுப்பாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan